மதிப்பீட்டாளரின் அபிப்பிராயம்
1990 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க தென் மாகாண சபையின் நிதி வரைவுச் சட்டத்தின் படி தென் மாகாணத்துக்குள் அமைந்துள்ள அசையாச் சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது குறித்த ஆதனத்தின் சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வு செலுத்தப்படுதல் வேண்டும்.
ஆனால், பெரும்பாலான கைமாற்றுச் செயற்பாடுகளின் போது சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வை செலுத்தப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.
மேற்காட்டிய நிதி வரைவூச் சட்டத்தின் 62ஆவது பிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்திற் கொள்ளும் போது 2013.05.01 ஆம் திகதி முதல் முத்திரைத் தீர்வை செலுத்துவதன் பேரில் மதிப்பீட்டாளரது கருத்துரை வழங்கப்பட வேண்டும் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஏவ்வாறாயினும் அது ;
- நிறைவேற்றப்பட்டாலும் அல்லது நிறைவேற்றப்படாவிட்டாலும்
- முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டாலும் அல்லது செலுத்தப்படாவிட்டாலும் சரியே
இதற்கமைய, முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டதன் பின்னர் திணைக்களத்திடம் முன்வைக்கப்படும் இணைப் பிரதிகளில் “முத்திரைத் தீர்வை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளது” என்ற முத்திரை பதித்து உறுதிப்படுத்தப்படும். சந்தைப் பெறுமதியைப் பரிசோதிப்பதற்கென இந்த ஆவணங்கள் அழைக்கப்படமாட்டாது.
இதற்கென ரூ.250/= இற்கான கட்டனமொன்று அறவிடப்படுவதுடன் பின்வரும் ஆவணங்களும் முன்வைக்கப்படுதல் வேண்டும்.
- காணி உறுதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது அவ்வாறு கையொப்பமிடவுள்ள காணி உறுதியின் ஒரு பிரதி
- கைமாற்றம் செய்யப்பட்ட ஆதனத்தின் உறுதியின் முதற்பிரதி
- நில அளவையாளர் வரைபடம்
- கட்டட வரைபடம்
- மாதிரிப் படிவங்கள்